Thursday 26 November 2015

தக்காளி தொக்கு

   தேவையான பொருட்கள்:-
  தக்காளி 100 கிராம்
  ப.மிளகாய் - 5                                         படம் உபயம்- கூகிளார் அவர்கள்     
  மிளகாய் பொடி - 2 ஸ்பூன் 
  மஞ்சள் பொடி  - சிறிது
  வெந்தய பொடி - சிறிது
  உப்பு - தேவைக்கேற்ப
     ========================
   தாளிக்க :
 கடுகுசிறிது
 உபருப்பு - சிறிது                          .எண்ணெய் - தேவைக்கேற்ப,                 ============================
       செய்முறை:     
   1.தக்காளியை நறுக்கி 
    தண்ணீர் விடாமல் 
    மிக்ஸியில் நைசாக அரைத்து 
         எடுத்துக்கொள்ளவும் .

       2. பொடி பொடி யாக .மிளகாய் நறுக்கி கொள்ளவும்.

     3.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,
           உளுந்த பருப்பு தாளித்து கொள்ளவும்

     4. அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்

        5. பின்பு மிளகாய் பொடிமஞ்சள் பொடிவெந்தய பொடி
     உப்பு சேர்த்து பொடி வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
        ,எண்ணெய் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
         
      கம கமவென சுவையான தக்காளி தொக்கு ரெடி.
      இது தயிர் சாதம்இட்லிதோசைசப்பாத்தி
      என அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.
                  
                        **********************************************************



                          

Friday 20 November 2015

எனது சில பதிவுகள்


          அன்பான தோழமையின் ஆணைக்கிணங்கி முகபுத்தகத்தில்        
          ஆரம்பிக்கப்பட்டது இந்த   " தென்றல் " எனும்  புது பக்கம்
                                   https://www.facebook.com/829790553785290  
                                             இது அதனுடைய லிங்க்....

அந்த பக்கத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் எனது நன்றிகள்.....




Sunday 1 November 2015

உளறல்கள் தொடரும்

பெண்ணே......

பெண்ணே உன்னை 
என்னவென வர்ணிப்பது?

காற்றென மிதமாய் 
வருடவும் செய்கிறாய்,
புயலென கோரமாய் 
அடிக்கவும் செய்கிறாய்,


அலையென 
தழுவவும் செய்கிறாய்,
பேரலையாய்
அழிக்கவும் செய்கிறாய்,

தீபமாய் 
ஒளிரவும் செய்கிறாய்,
காட்டுத் தீயாய் 
மிரட்டவும் செய்கிறாய்,

மழையாய் 
குளிரவும் செய்கிறாய்,
இடியாய்
தாக்கவும் செய்கிறாய்,

இயற்கைக்கும் உனக்கும் 
ஏதோ தொடர்பு உள்ளது,
ஆக்கலும் அழித்தலும்
இரண்டற கலந்துள்ளது உன்னில்...

என்னவோ புரியாத புதிராய் தான் இருக்கிறாய் நீ .......
============================================================
மழைத்துளியே......

மழைத்துளியே
என்ன வேணும் உனக்கு?
மேலிருந்து கீழே விழுகிறாய்,

மண்ணில்
பல கோலங்கள் இடுகிறாய்,

கடல், நதி  என அவற்றுள்
சங்கமித்துக்கொண்டாய்,

ஆட்டமும் பாட்டுமாய்
அப்படி என்ன குதூகலம் உனக்கு,
சந்தோச ஆர்பரிப்போ?

யாரைத் தேடி பூமிக்கு வந்தாய்?

உன் தேடல்
கிடைக்கவில்லையென
வானம் சென்றாயோ?

இல்லை
கிடைத்துவிட்டதென
மையம் கொண்டாயோ?

ஏதோ சொல்ல வந்து
சொல்லாமல் சென்றுவிட்டாயோ?

மறுபடியும்  நீ  பூமிக்கு  வந்து 
என் கேள்விக்கு விடைக் கூறிவிட்டு செல்லேன்.....