Thursday 22 October 2015

எனது உளறல்கள்

 என்  உயிர் அம்மா.....

பத்து மாதம் சுமந்தது போதாது என்று
நித்தமும் என்னை மனதில் சுமக்கும் பதுமை அவள்!

என் பாசம் பெரிதா உன் பாசம் பெரிதா என்று

பல முறை போட்டி போட்டு
இறுதிவரை ஜெயிக்கவில்லை நான் !

சாப்பிட முடியவில்லை என்னால்

உன் அன்பின் மிகுதியால்
எப்பவோ நிரம்பிவிட்டது மனமும் வயிறும், 

மறுபடியும் உன் வயிற்றில் 

தஞ்சம் புக ஆசையாகத் தான் இருக்கிறது,

வேறு எங்கு கிடைக்கும் அந்த பாதுகாப்பும் பரிசமும்.......


==============================================================


வருவாயோ? 


மழையே

இங்கு உன்னை நோக்கி 
பல விடியல்கள்,

வாழ்வில் 

வளம் கொழிக்க
விளக்கேற்ற 
நீ வருவாய் 
என்ற நம்பிக்கையில்
உன் வரவை நோக்கி 
காத்துக்கொண்டிருக்கிறது இந்த உலகம்.......
==========================================================

Thursday 15 October 2015

எனக்கு தெரிந்த சின்ன சின்ன மருத்துவ குறிப்புகள்:


1. எலுமிச்சை:-
      
    * தலையில் பொடுகு இருந்தால் எலுமிச்சைச் சாறை சிறிது நீரில் கலந்து
      தலையில் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறவைத்து அலசினால் 
      பொடுகு சரியாகிவிடும், முடி உதிர்தலும் குறையும்.

   *  அதே போல் தலைக் குளித்ததும் கடைசி கப் தண்ணீரீல்
       எலுமிச்சையைச் சாறை  சேர்த்து  தலைமுடி அலசினால் 
       முடிக் கொட்டுவது குறையும். முடியும் பளப் பளப்பாக  இருக்கும்.

2)  வேப்பிலை: - 

   * தலையில் பேன் தொல்லை இருந்தால் வேப்பிலையை அரைத்து
      தலையில் 15  நிமிடம் ஊற வைத்து அலசினால் பேன்தொல்லை 
      போய்விடும்.
   
   *  வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில்
       தலைமுடி அலசினால் முடிக் கொட்டுவது  குறையும்.

   *  வேப்பிலையை அரைத்து கால் பித்த வெடிப்பு உள்ள இடங்களில்
      தடவினால்  சீக்கிரம் சரியாகிவிடும்.

   *  முகப் பரு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.

   *  முக்கியமாக அம்மை  நோய்க்கு சிறந்த கிருமி நாசினி.
 

   *   சிறிது வேப்பிலையை  4, 5, மிளகுடன் சாப்பிட  வைரஸ் காய்ச்சல் வராமல்
        பாதுகாத்துக் கொள்ளலாம்.



3) வெந்தயம் : 

*  வெந்தயத்தை  முதல் நாள் இரவு ஊறவைத்து அதை மறு நாள்
   வெறும் வயிற்றில் மென்று சாப்பிட  உடல் உஷ்ணம் குறையும்.  
   வயிற்று புண்ணுக்கு நல்லது. 

*   நீரிழிவு  நோய் வராமல் தடுக்கும்.  ஏற்கனவே இருந்தால்  
    அதைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
    வறுத்து பொடி செய்து வைத்து தினமும் நீரில் கலந்தும் சாப்பிடலாம்.

*  மாதவிலக்கு ஏற்படும் போது வரும் வயிற்று வலி குறையும்.

*   வெந்தயத்தை முதல் நாள் ஊறவைத்து மறு நாள் அரைத்து 
     தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளித்தால் 
     உடல் குளிர்ச்சி அடையும், முடிக் கொட்டுவது  நிற்கும்.
     முடி நன்கு அடர்த்தியாக வளரும். 





  நெய்;-

*   தொண்டை வலியினால் அவதிபடுவோர் நெய்யுடன் சிறிது ஜீனி சேர்த்து        
    தொண்டையில் படும் படி சாப்பிட்டால் வலி பெருமளவு குறையும்.

*  தொண்டை புண் சரியாகும்.

*  நெய்யினை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் 
    அமிலத் தன்மையை சமன்செய்து வயிறு புண் ஆவதை தடுக்கும்.
    ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

*   உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.





தொடரும்...............



Wednesday 14 October 2015

அறுசுவையில் எனது கவிதைகளின் இணைப்புகள்


1) http://www.arusuvai.com/tamil/node/27374

1. அம்மா !
2. புதுப்பெண் . . . . . 
3. கைபேசி !
4. என்னவளின் கண்கள் !

2) http://www.arusuvai.com/tamil/node/27426

5.கடலே !
6.வெற்றி !
7.ஆறு மனமே !

**************************************************************



3) http://www.arusuvai.com/tamil/node/27570
8. நட்பின் பெருமை . . . 
9. காலம் . . .


4) http://www.arusuvai.com/tamil/node/27608

10. கனா கண்டேனே. . .
11. இயற்கையே !
12. ஒரு அனாதையின் ஏக்கம் . .  .


**************************************************************




5) http://www.arusuvai.com/tamil/node/27687

13. குட்டி தேவதையே. . .
14. பெண்ணின் குமுறல் . . .
15. அழகு . . .
16. காகிதத்தின் மேல் பொறாமை. . .

6) http://www.arusuvai.com/tamil/node/27883

17. வாழ்வின் உண்மை. . .
18. நியாபகமறதி !
19. ஏனோ ?

***************************************************************


7) http://www.arusuvai.com/tamil/node/28654

20. எழுத்தின் வலிமை !
21. மெளனத்தை கலைத்துவிடு . . .
22. ஆதங்கம் . . .
23. அன்பே . . .

8 ) http://www.arusuvai.com/tamil/node/29044

24. வேகத்தடை. . .
25. புரிதல். . .

**************************************************************


9)  http://www.arusuvai.com/tamil/node/29250

26. கிறுக்கல்கள் . . .
27. எப்படி சொல்வேன் ?
28. நினைவுகள் . . .

10)  http://www.arusuvai.com/tamil/node/29370

29. குழந்தையாகலாமா ?
30. கிறுக்கல்கள் - 2
31. கோபம் ஏன் ?
32. இடியுடன் மழை . . .

**************************************************************



11) http://www.arusuvai.com/tamil/node/29567

33. உன்னை நினைத்து . . .
34. எப்படி?
35. விடை என்னவோ?

12) http://www.arusuvai.com/tamil/node/29833

36. வானப் பெண்ணே . . .
37. நீ வருவாய் என. . .
38. அழகு இயற்கையே . . .
39. அழித்துவிடு . . .

**************************************************************


13) http://www.arusuvai.com/tamil/node/31133

40. வருமோ ?
41. விடியல் . . . 
42. நீயே . . . 
43. பெண்மையை போற்றுவோம் . . . 

14) http://www.arusuvai.com/tamil/node/31374

44. அழகோ அழகு !
45. கண்ணாடி . . .
46. திராவக வீச்சால் பொசுங்கிய பூவுக்காக . . . 
47. காற்றே !
48. வளையல் . . .

**************************************************************


15)  http://www.arusuvai.com/tamil/node/32134

49.  மழலை !
50. தாயின் தவிப்பு.....
51. பூவும் நானும் !
52. மெழுகுவர்த்தி !
53. திகில் . . .






Tuesday 6 October 2015

கோலங்கள்

பூமி தாயை அலங்கரிக்க 
எனக்கு தெரிந்த கிறுக்கல்கள் இந்த கோலங்கள்....












பல மலரும் பசுமையான  நிகழ்வுகளை இக்கோலம் அடிக்கடி நியாபகப்படுத்தும்.........மகிழ்ச்சியான தருணம் அது.


எனது கைவண்ணம்

..............செய்யனும் ஆசையா இருந்தது செய்தாச்சு.............